கொரோனாவால் மற்றுமொருவர் உயிரிழப்பு; மொத்த உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு..!

0

கொம்பனித் தெருவை சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. கொரோனவால் இடம் பெற்ற 16 ஆவது மரணம் இதுவாகும்.


இதேவேளை கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.


எனவே மக்கள் வெளியில் செல்வதை குறைத்து, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதன் ஊடாவே கொரோனாவில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதம் குறிப்பிடத்தக்கது.