கொரோனா சந்தேகம்; முல்லைத்தீவில் 217 பேர் சுய தனிமைப்படுத்தலில்..!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற அதே வேளை குறித்த நோய்த்தொற்றுடைய அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலர் சந்தேகத்தின் பேரில் சுய தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்


அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 217 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக முல்லைத் தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54 பேரும் வெலிஓயா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் மல்லாவி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 57 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 49பேருமாக மொத்தமாக 217 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.