புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா; பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்..!

0

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொறளை மற்றும் வெலிகட பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிறு) மாலை 6மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கையில் நேற்று மாத்திரம் புதிதாக 368 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 521ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3ஆயிரத்து 714ஆக காணப்படுகின்றது.

மேலும், 3ஆயிரத்து 792பேர், நாட்டிலுள்ள 27 வைத்திய சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.