கொரோனா அச்சத்தின் எதிரொலி; 40,000க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தலில்..!

0

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக கொரோன தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இவர்களுள் 33 ஆயிரம் பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்காணிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மினுவாங்கொடை ஆடைத் தொழிற் சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7 ஆயிரத்து 128 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனை தெரிவித்துள்ளர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கம்பஙா மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாய நிலை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.


இதனிடையே குருணாகல் , புத்தளம், கேகாலை, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா , அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய 13 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களை கண்காணிப்பதற்காக ஆயிரத்து 650 பொதுசுகாதார பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் நாடளாவிய ரீதியில் ராணுவத்தினரால் நடாத்திச் செல்லப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் எண்ணாயிரத்து 128 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டுவருவதாக கொரோன தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.


மேலும் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள 56 ஆயிரத்து 302 பேர் வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.