உயர்தர பரீட்சையில் குதிரையோடி சிக்கிய பல்கலைக் கழக மாணவன் கைது..!

0

ஆள்மாறாட்டம் செய்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒருவரை கற்பிட்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது.

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவர் ஒருவரை பரீட்சை கண்காணிப்பு குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து குறித்த மாணவன் கற்பிட்டி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவன் களனி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இவர் உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் தனது சக நண்பர்களுக்காக பரீட்சை எழுதி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறித்த மாணவன் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.