பேலியகொட மீன் சந்தையில் உருவான இரண்டாவது கொரோனா அலை..!

0

பேலியகொட மீன் சந்தையில் தோன்றிய கொரோனா தொற்று, மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொற்றில் இருந்து வெளிவந்த மிகப் பெரிய இரண்டாம் நிலை தொற்று என தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தை தொற்று நாடு முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


வைரஸின் தற்போதைய பரவல் குறித்து அறிய பலர் அக்கறையுடன் உள்ளனர். சமூகத்தில் வைரஸ் பரவியதன் விளைவாக தற்போதைய நிலைமை உருவாகியுள்ளது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் வரையறைகளின்படி, நாட்டில் பெரிய கொத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.


வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையை மாற்றுவது முக்கியம். எனவே, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சு வழங்கிய சுகாதார பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதையும் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர கேட்டுக் கொண்டார்.

இதேவேளை மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வு பூர்வமான தகவல்களும் உறுதிப் படுத்தப்படவில்லை.

அதனால் மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை” என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

மீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால், அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.