“மகிந்த அரசுக்கு ஆதரவை வெளியிட்டு இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவளித்தோரை கட்சியில் இருந்து உடன் நீக்க வேண்டும்”
றிசாட் மற்றும் ரவூப் ஹக்கீமின் எம்பிக்கள் குறித்து அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் அவர்கள் அனைவரையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் 22 எம் பிக்கள் அதன் செயலர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு கடிதம் அனுப்பினர்.
இதற்கிடையில் இன்று பிற்பகல் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசுக்கு ஆதரவளித்த பதுளை எம் பி அரவிந்தகுமாரை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுத்துள்ளது.