கருணாவிற்கு ஆப்புச் செருகத் தயாராகும் கோட்டா அரசு..!

0

1987 ஆம் ஆண்டு அரந்தலாவை பகுதியில் இடம் பெற்ற பிக்குகளின் கொலை தொடர்பில் குற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை – அரந்தலாவையில் 1987 ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்த 37 பிக்குகளின் படுகொலை விடுதலை புலிகளினால் நிகழ்த்தப்பட்டது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இடம் பெற்று 33 வருடங்களாகின்றது.


இதன்படி குறித்த படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெறவும் குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணை ஆரம்பித்து இரு வாரங்களில அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


இதேவேளை கிழக்கில் புலிகளின் தளபதியாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.