வவுனியா பேருந்து நிலைய வர்த்தக நிலையம் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தலில் ..!

0

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் உட்பட அங்கு பணியாற்றிய ஆறு பணியாளர்களும் சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர் .


இது குறித்து மேலும் தெரிய வருகையில் ,

வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று கோரோனா தொற்று இனங்காணப்பட்ட வீதி திருத்தப் பணி ஊழியர்களில் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளதாக சுகாதாத்துறையினருக்குத் தெரிவித்துள்ளார்.


இந் நிலையில் அவரது மருத்துவப் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் குறித்த வர்த்தக நிலையத்திதை மூடிவிடுமாறும் அங்கு பணியாற்றிய பெண்கள் ஆறு ஊழியர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் நேற்று இரவு சுகாதாரத் துறையினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதற்கு அமைவாக தமது வர்த்தக நிலையம் மூடப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.