பிரபாகரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு..!

0

கடந்த சில நாட்களாக உலகளவில் கண்டனங்கள் குவிந்து வரும் திரைப்படமாக இருப்பது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு திரைப்படம்.

அந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டார். இதன்போது குறித்த திரைப்படம் 800 என்ற பெயரில் வெளியாவது குறித்து கடந்த சில நாட்களாக உலகளவில் கண்டனங்கள் குவிந்து வந்தன.


இயக்குனர் இமயம் பாரதிராஜா, சீனு ராமசாமி, வைரமுத்து உள்பட பல திரையுலக பிரபலங்களும் சீமான், திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

ஒரு கட்டத்தில் முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் தன்னுடைய படத்தால் அவருடைய திரையுலக வாழ்க்கைக்கு பிரச்சனை வேண்டாம் என்று கூறியதை அடுத்து நன்றி வணக்கம் என்று கூறி விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகினார்.


இந்த நிலையில் தற்போது அதே விஜய் சேதுபதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் தொடருக்கு நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை தொடராக இயக்க உள்ளார்.

இந்த தொடரில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இவர் ஏற்கனவே இவர் சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த திரைப் படங்களை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.