வவுனியாவில் மூவருக்கு கொரோனோ; நூற்றுக்கு மேற்பட்டோரை தனிமைப்படுத்த நடவடிக்கை..!

0

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனொ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.


இந்நிலையில் அவர்களில் 25பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதேவேளை குறித்த நெடுங்கேணி சந்தியில் அமைந்துள்ள MAGA நிறுவனத்தில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் குறித்த நிறுவனத்தில் பணி புரிந்த அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.