ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன் வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.