ஐஸ்லாந்தின் தென் மேற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

0

ஐஸ்லாந்தின் தென் மேற்குப் பகுதியில் இன்று செவ்வாய்க் கிழமை 5.6 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் ரெய்காவிக் கில் அமைந்துள்ள கட்டிடங்கள் உலுக்கியுள்ளது.

எனினும் நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.


ஐஸ்லாந்து நேரப்படி இன்று பிற்பகல் 1.43 ரெய்காவிக் நகருக்கு தெற்கே 20 மைல் தொலைவில் உள்ள கிரிசுவிக் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.