இளம் பெண் கிராம சேவகருக்கு தொல்லை கொடுத்த பிரதேச செயலாளர் கைது..!

0

இளம் பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக பிரதேச செயலாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 4ஆம் திகதி கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் இளம் பெண் கிராம சேவகர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதேச செயலாளர், தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதாக குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் புத்தளம் பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.


இதனையடுத்து நேற்று (19) கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.