பரீட்சை நிலையங்களில் சுகாதார வசதிகள் திருப்தி இல்லை எனில் 1988 க்கு அழைக்கவும்..!

0

எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு பரீட்சை நிலையத்திலும் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யாத வகையில் அல்லது தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாது விட்டால் அல்லது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் உடனடியாக கல்வி அமைச்சின் துரித இலக்கமான 1988 க்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவதால் ஏற்படும் அபாயத்தை கருத்திலெடுத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் முழு ஆதரவோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவகையில் பரீட்சையை நடாத்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.


பரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், பரீட்சை நிலைய வளாகத்தின் கிருமி நீக்கம் மற்றும் தேவையான சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் அந்தந்த பரீட்சை நிலையங்களின் நிலைய அதிபர், உதவி அதிபர் அல்லது சிரேஷ்ட ஆசிரியரை மேலதிமாக கல்வி அமைச்சு நியமித்துள்ளது.


மேலும் அவர்களுக்கு நாளொன்றுக்கு 1500/= வீதம் 22 நாட்களுக்கும் கொடுப்பனவையும் வழங்கியுள்ளதுடன் கிருமி நீக்கத்துக்கான பொருட் கொள்வனவிற்கும் நிதி ஒதுக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.