தேசிய பாடசாலைகள் 166 இற்கு அதிபர் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்..!

0

தேசிய பாடசாலைகளில் நிலவும் 166 அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு விரைவில் நேர்முகப் பரீட்சையை நடாத்தி நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்தார்.