நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட்டிற்கு நீதிபதி வழங்கிய உத்தரவு..!

0

தெஹிவளை,எபனேசர் வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் மருத்துவர் உட்பட கைது செய்யப்பட்ட 7 பேரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.


இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முன்னர் 24 மணித்தியாலங்கள் அவரை கண்காணிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்தல் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.