ஹைட்ராமணி ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று..!

0

கொழும்பு கஹாதுடுவாவில் உள்ள ஹைட்ராமணி (hirdaramani) ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கும் அவரது சகோதரருக்கும் கொரோனா இருப்பதாக ஹொரன பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.இவர்கள் olaboduwa பகுதியில் வசிப்பவர்கள் என்றும், மினுவாங்கொடவில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டதாகவும், அங்கு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பழகியதாக தெரிய வந்துள்ளது.


சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.