முன்னாள் அமைச்சர் ரிஷாட்டை கைது செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு..!

0

முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம் பியுமான ரிசார்ட் பதியுதீன் மற்றும் இருவரை கைது கைது செய்ய பிடியாணை கோரிய சி ஐ டியினரின் மனு கோட்டை நீதவானால் நிராகரிக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கு வரும் 27 ஆம் திகதி விசாரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இடம்பெயர்ந்தவர்களை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் அழைத்துச் சென்றதன் மூலம் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதான குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனை கைது செய்யும் பிடியாணையை நீதிமன்றில் பெறுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபரை இன்று காலை பணித்திருந்த நிலையில் நீதவானின் இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது.