முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு..!

0

நீதிமன்ற பிடியாணையைப் பெற்று முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனை கைது செய்யுமாறு, பதில் காவற்துறை மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரச பேருந்துகளைப் பயன்படுத்தி புத்தளத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்படி அவரை பொது சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் அரச சொத்துக்களை மோசடி செய்ய பலர் தற்போதய அரசில் அமைச்சர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.