வவுனியாவில் வாகன விபத்து; ஐவர் படுகாயம்..!

0

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

வவுனியா நகர்ப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக சாந்தசோலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சாந்தசோலை சந்தியால் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வேகமாக பின்னால் வந்து கொண்டிருந்த மிதிவெடி அகற்றல் நிறுவனத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.


விபத்தில் குறித்த கெப் ரக வாகனம் அருகில் இருந்து பள்ளத்திற்குள் விழுந்த நிலையில் பாரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் உட்பட 5பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.