திருகோணமலையில் விபச்சார நிலையம் முற்றுகை; மூவர் கைது..!

0

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை கண்டி வீதி, லிங்க நகர் பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்கின்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று தங்களால் முற்றுகை இடப்பட்டதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


முற்றுகையின் போது விடுதி நடத்துனர் (வயது 30), உட்பட அம்பாறை மாவட்டம் உகன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவரும், அநுராதபுரம் மாவட்டம், ககட்டகஸ்திரேலிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரும் கைது செய்யப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்