15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல்; அதில் 3 மாணவிகள் முல்லை மன்மதனின் காதல் லீலைகள்..!

0

24 வயதில் 15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் தொடர்பை பேணிய இளைஞன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதைவிட அதிர்ச்சியானது, குறிப்பிட்ட இளைஞன் இல்லாமல் தம்மால் வாழ முடியாது என சம நேரத்தில் பாடசாலை 3 மாணவிகள் அடம்பிடித்து வருகிறார்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக் கழக மாணவியொருவர் கடந்த 2 மாதங்களாக காதல் தொடர்பை பேணியுள்ளார். பல்கலைகழக புகுமுக மாணவரான முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரையே காதலித்தார்.

இந்த விவகாரம் யுவதியின் உறவினர்களிற்கு தெரிய வந்ததையடுத்து, இளைஞன் குறித்து ஆராய்ந்த போது, அவர் தற்போது வேறு இரண்டு யுவதிகளுடன் காதல் தொடர்புகளை பேணுவதாக அவர்களிற்கு தகவல் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியிலுள்ள உயர்தர வகுப்பு மாணவிகள் அவர்கள்.


இதையடுத்து இளைஞனை வசமாக சிக்க வைக்க ஒரு நூதன உத்தியை, கிளிநொச்சி காதலியின் உறவினர்கள் கையாண்டார்கள்.

யுவதியொருவரின் படத்துடன் போலி முகநூல் கணக்கை ஆரம்பித்து, பல்கலைக் கழக மாணவனுடன் சட் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஏற்கனவே சம நேரத்தில் மூன்று காதலிகளை கொண்டுள்ள மாணவன், போலி முகநூல் கணக்கிற்கு நான்காவதாக காதல் விண்ணப்பம் செய்தார்.

இதையடுத்து இரண்டு தரப்பும் பேஸ்புக்கில் காதல் வளர்த்தனர். கடந்த மாத இறுதிப்பகுதியில் இளைஞனை கிளிநொச்சியின் ஒரு பகுதிக்கு வருமாறு பேஸ்புக் காதலி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, உற்சாகமடைந்த பல்கலைக் கழக மாணவன் பரிசுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொண்டு கிளிநொச்சிக்கு பறந்து வந்துள்ளார். குறிப்பிடப்பட்ட இடத்திற்கு மாணவன் வந்ததும், கிளிநொச்சி மாணவியின் உறவினர்கள் அவரை பிடித்துக் கொண்டனர்.


இளைஞனை முறையாக கவனித்து, அவரது கைத்தொலைபேசியை பறித்து சோதனையிட்ட போது, அதற்குள் பல யுவதிகளுடன் அவர் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன.

அது குறித்து வினவியபோது, தான் 15 இற்கும் அதிகமான யுவதிகளை காதலித்ததாகவும், கிடைக்கும் போது சந்தர்ப்பத்தை வீணாக்காமல் பயன்படுத்த எண்ணியதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இளைஞன் உயர்தர பரீட்சையின் பின்னர், மாணவிகளிற்கு கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகள் சிலருடன் அவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களும் கைத்தொலைபேசியில் சிக்கின. அவர் காதலிக்கும் பெண்களில் இருவர், அவரிடம் மேலதிக வகுப்பிற்கு வந்த இரண்டு மாணவிகளே.

இளைஞனின் காதலிகளிற்கு நடந்த விடயத்தை கிளிநொச்சி இளைஞர்கள் தெரிவித்து, கல்வி கற்கும் வயதில் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். எனினும், 3 மாணவிகளுமே குறிப்பிட்ட மாணவன் இல்லாமல் தம்மால் வாழ முடியாதென, அறிவுரை கூறிய இளைஞர்களிடம் தெரிவித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.


மூவரில் ஒருவரை இளைஞன் பதிவுத் திருமணம் செய்ய வேண்டும். 2 வருடங்களாக காதலிக்கும் முல்லைத்தீவு மாணவியொருவரை பதிவுத் திருமணம் செய்யும்படி அவரை வலியுறுத்தினர்.

எனினும், அதை மறுத்த மாணவன், 2 மாத காதலியான கிளிநொச்சி மாணவியே தனக்கு தேவையென அடம்பிடித்து வருகிறார். தன்னை தவிர்த்து மாணவன் வேறு முடிவெடுத்தால், தாம் விபரீத முடிவெடுப்போம் என அம் மாணவிகள் அடம்பிடித்து வருகிறார்கள்.


இதையடுத்து, இளைஞனை உடனடியாக திருந்தி செயற்படுமாறும், தொடர்ந்து இப்படி செயற்பட்டால் அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்துவோம் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.