முல்லைத் தீவில் நால்வருக்கு கொரோனா உறுதி..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நான்கு கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கம்பஹா மினுவான்கொட பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படைப் பிரிவின் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு நிலையத்தில் 161 பேர் கடந்த 08.10.2020 அன்று இவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.


இவர்களில் முதற்கட்ட மாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசேததனையில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து,


அவர்கள் அனுராதரபுரம் பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் ஏனையவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.