இன்றிரவு 103 கொரோனா தொற்றாளர்கள்; ஒரு வாரத்தில் 1186 ஆக அதிகரிப்பு..!

0

இன்றிரவு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேரில் 87 பேர் மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள். அதில் முன்பள்ளி செல்லும் 3 வயது சிறுமியும் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.


அத்தனகல பகுதியை சேர்ந்த 10 பேரும் கிரில்லவல பகுதியை சேர்ந்த 5 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.


அதன்படி, இதுவரையில் மொத்தமாக பிரண்டிக்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.