வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது..!

0

வவுனியாவில் கடந்த வாரம் மன்னார் வீதியில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று ஒரு வாரத்தில் செட்டிகுளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .


இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் வீதி இரண்டாம் ஒழுங்கை , வேப்பங் குளத்தில் வீடு ஒன்றில் நான்கு பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி . ஆர் . மானமடுவவின் வழி நடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்தவின் தலைமையில் சென்ற குழுவினரால் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகள் நான்கு பவுண் இன்று மீட்கப்பட்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 20 , 23 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .


கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர் .