ஹொரணை வைத்திய சாலையின் இரு தாதியர்களுக்கு கொரோனா..!

0

ஹொரணை ஆதார வைத்திய சாலையின் இரு தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வைத்திய சாலையின் எண் எண் 09 மற்றும் 05 விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாதியர்கள் இருவருள் ஒருவரின் கணவர் மினுவாங் கொட ஆடைத் தொழிற் சாலையின் ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபரும் அவரது மற்றுமொரு குடும்ப உறுப்பினரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இரு தாதியர்களும், மற்றைய இருவரும் நெவில் பெர்னாண்டோ மற்றும் ஐ.டி.எச் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கம்பாஹா மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு சிறிய பணியாளர் உறுப்பினரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.