இராணுவ புலனாய்வு சிப்பாயின் சடலம் வவுனியா பட்டைக்காடு கிணற்றிலிருந்து மீட்பு..!

0

வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ புலனாய்வு சிப்பாயின் சடலம் இன்று அதிகாலை பட்டக்காடு சந்தியிலுள்ள வீட்டுக் கிணறிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர் .

இரகசிய புலனாய்வு தகவல் ஒன்றின் அடிப்படையில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக நேற்று இரவு 8 மணியளவில் சென்ற போது கிணிற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது .


இன்று அதிகாலை 1.30 மணியளவில் புலனாய்வு சிப்பாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த இராணுவ புலனாய்வு சிப்பாய் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த இராணுவ புலனாய்வு சிப்பாய் டபியூ.ஏ . அஜித் வயது 35, வலபொல , மாத்தறையைச் சேர்ந்தவர் என்று இனங் காணப்பட்டுள்ளார்.


தற்போது வவுனியா சவச் சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்ட வைத்திய அதிகாரியினால் மரண விசாரணைகள் இடம் பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .