வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களுக்கு விடுத்துள்ள அவசரமான அறிவிப்பு..!

0

வவுனியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .


எனினும் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை இருந்தும் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார நடைமுறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .


பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொலிசார் , படையினர் , சுகாதாரத் துறையினர், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி . ஆர் . மானமடுவ தெரிவித்துள்ளார் .