தமிழ் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை..!

0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலாங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை பிரிவை சேர்ந்த 18 வயதுடைய ராமகிருஷ்ணன் தர்சிகா என்ற பாடசாலை மாணவியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை தற்கொலை என்பது எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தராது என்பதுடன் குறித்த தற்கொலைகளின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.