மன்னார் கடற்படையினால் 396 கிலோ மஞ்சள் மீட்பு..!

0

மன்னார் தாழ்வுபாடு கடற் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 396 கிலோ மஞ்சள் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,

இன்று அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற் பிராந்தில் கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றிலிருந்து 396 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்திடம் கடற்படையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .


எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இது வரையில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .