இந்தியாவில் 30கோடி மக்கள் உணவு தட்டுப்பாடால் பாதிக்கப்படுவார்கள் – ஐ.நா. எச்சரிக்கை

0

இந்தியாவில் 30கோடி மக்கள் உணவு தட்டுப்பாடால் பாதிக்கப்படுவார்கள் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தின் வளாச்சி இந்த ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.


இது தொடார்பாக ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா சூழலில் உலக பொருளாதாரம் கடுமையாக சரிந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலக பொருளாதார வளச்சி நிகழாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும்.

இதனால் உலக அளவில் ரூ.441 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கொரோனா தொற்றுக்கு முன்பே பொருளாதார நிபுணர்கள் மதிப்பீடு செய்திருந்தனர்.

இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளின் பொருளாதாரம் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளதைப் போல் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை ஐந்தில் ஒரு பங்கு பாதிப்புக்கு உள்ளாகும். அந்நிய முதலீடுகள் 40 சதவீதம் குறையும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு 3.9 சதவீதம் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட தீவிர பொது முடக்கத்தால் நாடு முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் என்பது நிரந்தர வருவாய் இழப்பாகும். 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

சீனாவில் அதிகரிக்கும்

நிகழாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதம் குறையும், 2021-இல் 2.8 சதவீதம் அதிகரிக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 1.3 சதவீதமும், 2021-இல் 8.1 சதவீதமும் அதிகரிக்கும்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கத்தை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருந்தன. இதனால் பொருளாதார நெருக்கடி அதிகரித்து விட்டது.

2021-ஆம் ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்றாலும், பல நாடுகளில் இது சமநிலையாக இருக்காது. இதனால் பல நாடுகளில் வேலையிழப்பு அதிகரிக்கும், பல நிறுவனங்கள் மூடப்படும் சூழல் ஏற்படும்.


அரசாங்கம், தனியார் நிறுவனங்களின் கடன்களின் அளவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், தவறான பொருளாதார கொள்கைகள், தவறுகளைத் திருத்தாமல் செயல்படுவது ஆகியவற்றால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும்.

வளர்ந்த நாடுகளிலேயே உற்பத்தித் துறையில் இரண்டு சதவீத சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
வளரும் நாடுகள் பணவீக்கத்தாலும், சுற்றுலாத் துறையில் கடன் சுமை அதிகரிப்பதாலும் கடுமையாக பாதிப்படையும்.


அந்நாடுகளில் வாழும் 9 முதல் 12 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள். சுமார் 30 கோடி பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவர்.

வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, ஊதியத்தை அதிகரிப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அரசு நிதியுதவியுடன் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க நடவடிக்கைள் எடுப்பது போன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தைரியமாக எடுக்க வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது