மட்டக்களப்பில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; காதலன் உட்பட மூவர் கைது..!

0

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட சிறுமி அங்கிருந்து தப்பித்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டபோது இராணுவத்தினர் காப்பாற்றதுடன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 22 வயதுடைய ஆயித்திய மலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 4 ம் திகதி இரவு 11 மணியளவில் காதலன் சிறுமியை கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டில் இருந்து வெளியில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சிறுமி வீட்டின் வெளிப் பகுதில் நின்றிருந்த போது அங்கு மதுபோதையில் அவளுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்திருந்ததாகவும் அப்போது சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்த போது சிறுமி வர முடியாது என தெரிவித்தார்.


இந் நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர் சிறுமியின் வாயை பொத்தி அவரை வீட்டின் வேலிப் பகுதியில் இருந்து தூக்கி அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலன் சிறுமியை முதலில் பாலியல் பலத்காரம் செய்ததுடன், அவரின் நண்பன் ஒருவன் சிறுமியை பலாத்தகாரம் செய்ய முற்பட்ட போது சிறுமி அவனின் கையை வாயால் கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்

இதன் பின்னர் 05 ம் திகதி திங்கட் கிழமை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை மட்டு போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமியின் காதலன் மற்றும் நண்பர்கள் தலைமறைவாகி இருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 06ம் திகதி செவ்வாய்க் கிழமை இரவு வைத்திய சாலையில் இருந்து தப்பி மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்து நீந்திய போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அவரை காப்பாற்றி வைத்திய சாலையில் அனுமதித்தனர் .


இதேவேளை தலைமறைவாகி வந்த சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரை இன்று வியாழைக் கிழமை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.