வவுனியா உப தவிசாளரின் விருந்தினர் விடுதியில் கலாச்சார சீரழிவு..!

0

வவுனியா சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளருக்குச் சொந்தமான கண்டி வீதி தேக்கவத்தை 5 ஆம் ஒழுங்கையிலுள்ள விருந்தினர் விடுதியில் கலாச்சார சீரழிவுகள் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது .

இதனை தடுத்து நிறுத்துமாறு பல தரப்பினரிடம் கோரியும் அச் செயற்பாடு தடுத்து நிறுத்தப்படவில்லை. இதனால் இப் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் .


விருந்தினர் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியிலுள்ள வாய்காலில் செல்வதாவும் அங்கு தேங்கி நிற்பதாலும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகின்றது.

இது குறித்து அப்பகுதிக்குப் பொறுப்பாக உள்ள சுகாதாரப்பரிசோதகரிடம் அறிவிக்கப்பட்டு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளருக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி என்பதால் நடவடிக்கைகள் எடுப்பதற்கு பலர் அச்சம் தெரிவித்த வருகின்றனர் . அல்லது ஆதரவளிக்கின்றனர் .

எனவே தகுதி தராதரம் பாராது விருந்தினர் விடுதியில் இடம் பெறும் கலாச்சார சீரழிவு, கழிவு நீர் வெளியேற்றம் என்பனவற்றைத் தடுத்து சுகாதாரமாக வாழ்வதற்கு வழியேற்படுத்தித் தருமாறும் அப் பகுதியில் வசித்து வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.