வவுனியா உட்பட நாட்டின் சகல தனியார் கல்வி நிலையங்களுக்கும் பூட்டு..!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த் தாக்கம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வவுனியாவின் சகல தனியார் கல்வி நிறுவனங்களை மூடுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவிட் நோய்த் தாக்கம் காரணமாக நாட்டின் சகல அரச, தனியார் பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், அம்பாறை உட்பட வடமேல் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள சகல தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.


இந் நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.


கோவிட் நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலையும் மூடுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன பணித்துள்ளார்.