யாழில் போதியளவு பொருள்கள் கையிருப்பில்; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..!

0

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்புள்ளன எனவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தெரிவித்தார்.

சமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப் பொருள்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன.

அது மட்டுமன்றி கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து வரப்படுகின்றன. ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.


அது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.