பொலிஸ் தலைமையகத்தின் ஊரடங்குச் சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல் வெளியாகியது..!

0

கம்பஹா ,கிரிந்திவெல,தொம்பே ,பூகொட, கனேமுல்ல, வீரங்குல ,வெலிவேரிய ,மல்வத்து ஹிறிப்பிட்டிய, நிட்டம்புவ, மீரிகம , பல்லேவல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

திவுலப்பிட்டிய,மினுவாங்கொட ,வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என ஏற்கனவே பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.


இந் நிலையில் திவுலபிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் தற்போது அறிவித்துள்ளது .


எனவே ஏற்கனவே குறிப்பிட்டபடி 12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளை முடக்கும் நிலை ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.