மக்களே அவதானம்; கம்பஹா காமன்ஸில் பணியாற்றிய 569 பேருக்கு இதுவரை கொரோனா..!

0

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை அங்கு மொத்தமாக 569 பேர் கொரோனா வைரஸுடன் இருக்க அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற் சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.