வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் விபச்சார அழகிகள் கைது..!

0

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது என்ற முறைப்பாட்டையடுத்து, அதிரடியாக செயற்பட்ட பொலிசார், விபச்சார அழகிகள் 5 பேரை கைது செய்துள்ளனர்.

பழைய பேருந்து நிலைய விபச்சார நடவடிக்கை குறித்து முன்னணியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் எழுத்துமூல முறைப்பாடு வழங்கியிருந்தார்.


இதேவேளை, அங்கு நடக்கும் விபச்சார நடவடிக்கை குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, நேற்று முற்பகல் 10 மணியளவில் பொலிசார் சோதனை நடத்தினர்.

இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 5 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் குருணாகல், முல்லைத்தீவு, விசுவமடு, நெடுங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.