ஆடைத் தொழிற்சாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 88 ஆக உயர்வு..!

0

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு இதுவரை 88 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.