யாழில் உதைபந்தாட்ட அணியொன்றின் கொடியில் புலி; அதனால் தடை..!

0

வல்வெட்டித் துறையில் இடம் பெறும் வல்வை பிரீமியர் லீக் உதைபந்தாட்ட தொடரில் நேற்றைய முதல்நாள் நிகழ்வில் பங்கேற்கும் அணியொன்றின் கொடியில் புலியின் படம் இருந்ததால் அந்த கொடியை ஏற்ற முடியாதென இராணுவமும், பொலிசாரும் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்டா சுப்பர் கிங்ஸ் அணியின் கொடியில் உறுமும் புலிகள் இரண்டு உள்ளன.


இந்த கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுவதற்கோ, காட்சிப்படுத்தவோ முடியாது என இராணுவத்தினரும், பொலிசாரும் தடை விதித்தனர்.