இளம் வயது சிறுமியொருவரை திருமணம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்..!

0

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளம் வயது சிறுமியொருவரை திருமணம் செய்த இளைஞயொருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இவ்வுத்தரவை நேற்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை, புதூர், கதிரவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான இளைஞர் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் வயது திருமணம் தொடர்பாக சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப் படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.