கேரள கஞ்சாவுடன் வவுனியாவில் இளைஞன் கைது..!

0

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (02.10.2020) அதிகாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,


பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேலங்குளத்தில் உள்ள அவரது வீட்டினை சோதனை மேற்கொண்ட போது அவரிடமிருந்து 775 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது.

வவுனியா வேலங்குளம் பகுதியை சேரந்த 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தெரிவித்தார்.