வவுனியாவில் இருளில் தடுமாறிய கோட்டாவின் சகோதரன்..!

0

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் பல விசேட அதிதிகள் கலந்து கொண்ட நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப் பட்டமையினால் கேட்போர் கூடம் சில நிமிடங்கள் இருளில் முழ்கியது.


வவுனியா மாவட்ட செயலகத்தில் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மங்கள விளக்கேற்றிய பின்னர் அதிதிகள் கதிரையில் அமர முற்பட்ட சமயத்தில் திடீரென கேட்போர் கூடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.​


​இதன் காரணமாக கேட்போர் கூடம் சில நிமிடங்கள் இருளில் முழ்கியிருந்ததுடன் பாதுகாப்பு பிரிவினர் அமைச்சரை சூழ்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் கேட்போர் கூடத்திற்கு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.