வவுனியா வடக்கில் புத்தெழுச்சி பெறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்..!

0

இன்றைய தினம் வவுனியா வடக்கு வலயத்திற்கான இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் தலைவராக ஆசிரியர் தி.தியாகேஸ்வரனும், செயலாளராக ஆசிரியர் ம.ஜெகதீஸ்வரனும் ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுக் குழுவாலும், பொருளாளராக ஆசிரியர் பூ.லோகேந்திரனும், உபதலைவராக மரக்காரம்பளை அ.த.க பாடசாலை அதிபர் திருமதி K.ராஜலக்ஸ்மி அவர்களும், உப செயலாளராக ஆசிரியர் திரு.பு.சசிதரன் அவர்களும், ஓமந்தை கோட்ட இணைப்பாளராக ஆசிரியர் த.யுகேந்திரா அவர்களும், நெடுங்கேணி கோட்ட இணைப்பாளராக ஆசிரியர் த.சுகுமார் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் வ வுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கான இணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.