யாழ் மருத்துவ சங்கத்தின் இவ்வருட விஞ்ஞான அமர்வு நேற்று ஆரம்பம்..!

0

யாழ் மருத்துவ சங்கத்தின் இவ்வருட விஞ்ஞான அமர்வு நேற்று ஆரம்பமாகியது.

இவ்வருடத்துக்கான தொனிப்பொருள் “கற்றலும் ஈடுபாடும்”ஒவ்வொருவரும் கடமையை முழுமனதோடும் ஈடுபாடோடும் செய்வது மிகவும் முக்கியம்.

மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அருள்மொழி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பீட தலைவர் பேராசிரியர் ஷாலினி ஸ்ரீரங்கநாதன் கலந்து உரையாற்றினர். வைத்தியர்கள் பாதுகாப்பான மருந்துகளை பரிந்துரை செய்வதில் உள்ள கடமைப்பாடு பற்றி வலியுறுத்தினர்.

மறைந்த முன்னாள் பேராசிரியர் C. சிவஞானசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்த சொற்பொழிவினை வைத்திய நிபுணர் K. முகுந்தன் ட்ரான்எக்ஸாமிக் அசிட் (Tranexamic Acid) குழந்தை பிரசவத்தில் குருதி இழப்பை தடுப்பதில் உள்ள கணிசமான பங்கு பற்றிய ஆய்வினை வெளியிட்டார். மேலும் அவர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வின் முடிவுகளையும் மேற்படி சொற்பொழிவில் வெளியிட்டார்.

சொற்பொழிவின் சிறப்பு பிரதியை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.

மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர் கலா சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார்.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர் ஆனந்தராஜா Sir, வைத்திய நிபுணர் கணேசமூர்த்தி Sir, வைத்திய நிபுணர் கணேசமூர்த்தி Madam,
யாழ் மருத்துவபீட பீடாதிபதி வைத்திய நிபுணர் ரவிராஜ், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வசந்தி அரசரட்ணம் Madam உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் கலந்துகொண்டார்கள்.

சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் குமரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முற்றுப்பெற்றது.