நிர்வாக முடக்கலின் எதிரொலி; ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்த பொலிசார்..!

0

அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும், இறந்தவர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கு பகுதியில் இன்று ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில்,

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் பொலிசாரால் பெறப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைக்களை தொடர்பு கொண்ட பொலிசார் பாடசாலைக்கு சமூகமளித்த மற்றும், சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை அதிபர்களிடம் பெற்றுக் கொண்டதுடன், பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் கேட்டறித்து கொண்டனர்.

ஆனாலும் பாடசாலைகளிற்கு மாணவர்கள் பெரியளவில் சமூகமளிக்காத நிலையில் கணிசமான ஆசிரியர்கள் பாடசாலை சென்றிருந்தமை குறிப்பிடக்கது.

இதேவேளை, குறித்த ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க ஆதரவை வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.