விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதிரடிக் கைது; வவுனியாவில் சம்பவம்..!

0

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


இதன் போது விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அண்மைக் காலமாக வவுனியாவில் அதிகளவில் பொது இடங்களில் இவ் விபச்சார பெண்கள் நடமாடுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த 3 பெண்களையும் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பில் அவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் ஆயர்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.