ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறும் ஸ்ரீலங்கா..!

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45 ஆவது அமர்வில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


2009 முதல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை போலியான யுத்தக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றது இலங்கையை காட்டு மிராண்டி தேசமாக காண்பிக்க முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளித்துள்ள ரம்புக்வெல சில அதிகாரிகள் 55வயதுக்கு முன்னர் ஓய்வு பெறுகின்றனர்.

ஆகவே அவர்கள் ஓய்வுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்டிருந்தால் அரசாங்கத்தின் நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு நியாயமாக நடக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சமீபத்தைய கருத்துக்கள் இலங்கைக்கு எதிரான கடந்த கால கருத்துக்களின் தொடர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடாக நாங்கள் சரணடைந்தால் மனித உரிமை பேரவை தெரிவிக்கும் அனைத்தையும் ஏற்க வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ்பத்திரன,


உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை மனித உரிமை பேரவைக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.