சற்றுமுன் வவுனியாவில் விபத்து; 15 வயது பிரபல பாடசாலை மாணவன் பலி..!

0

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் மரணித்துள்ளார்.

இன்று இரவு 7 மணியளவில் இட ம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் வருவதாவது,

வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவனை அதே பாதையில் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம் பெற்றது.


விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயதுடைய எழில்ராசா புவிதன் என்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் பலியானதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மூன்று மோட்டர் சைக்கிள்கள் சமாந்தரமாக சென்றமையினாலேயே குறித்த அனர்த்தம் இடம் பெற்றதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் தவிர ஏனை இரு மோட்டர் சைக்கிள்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தில் ஊழியராக கடமையாற்றும் எழில் என்பவரின் மகன் என்பதுடன்,

இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்ற வீதிப் போக்குவரத்துக்கு பொறுப்பான SI அரச ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எதிராக பழிவாங்கல்களை மேற்கொள்ளும் அதேவேளை இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு கொள்வதில்லை என கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.